தன்னைப் பற்றி அவரின் மேனேஜரிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார் என நடிகர் அருண் விஜய், தல அஜித் குறித்து பெருமையாக பேசியுள்ளார்.

நடிகர் விஜயகுமார் மகன் என்ற வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகமானவர் அருண் விஜய். ஏ ஆர் ரகுமான் இசையில் ஒரு பாடலை பாடியிருந்தார் அருண் விஜய். எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் வெற்றி பெறாவிட்டாலும், கலவையான விமர்சனம் வாங்கியது.

தொடர்ந்து அவர் நடிட்த கங்கா கெளரி, பாண்டவர் பூமி, மாஞ்சா வேலு உள்ளிட்ட படங்கள் அவ்வளவாக வெற்றியை தராததால் சில காலம் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில் தல அஜித் நடிப்பில் உருவான ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கிடைத்தது. அதுவும் வில்லனாக.

அவர் ஹீரோவாக நடித்து கிடைக்காத பெருமையை, ஹாண்ட்சம் வில்லனாக நடித்ததில் கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பற்றிக் கொண்ட அருண் விஜய், அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளில் நல்ல கதையை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.
அப்படி அவர் நடித்த ‘குற்றம் 23’ படம் வெற்றி பெற்றது. தற்போது அவர் ஹீரோவாக நடித்து வரும் ‘தடம்’ படம் ரீலீஸாக காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தடம் படம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருண் விஜய்யிடம், அஜித் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நாங்கள் இருவரும் அண்மையில் நேரில் சந்தித்துப் பேசியதில்லை. ஆனால் அவரின் மேனேஜரிடம் என்னைப் பற்றி அடிக்கடி கேட்டு தெரிந்து கொள்கிறார்.

அவருக்கும், எனக்கும் உள்ள இந்த உறவு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் சொன்ன வார்த்தைகள் ஞாபகமாக உள்ளது. அதன் படி தான் நடக்கிறேன்.” என கூறியுள்ளார்