நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலிய அணி வீரரான அடம் சம்பா பந்தை சேதப்படுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இப் போட்டியில் அடம் சம்பா பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளும் போது அவர் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஒரு ஓவரில் பந்து வீசுவதற்கு முன்பாக அவர் தன்னுடைய காற்சட்டைப் பொக்கெட்டுக்குள் கையை விட்டு ஏதோ ஒன்றை எடுத்து பந்து மீது வைப்பது போன்று காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்தக் காணொளியில் அவர் பல முறை இது போல் செய்கின்றமையை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

8 Shares