அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட்பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் 05பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

சிவனொளிபாத மலைக்கு தர்சிக்க சென்று பதுளை நோக்கி பயனித்த முச்சக்கர வண்டி ஒன்று அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் அயரபிபகுதியில் வீதியை விட்டு விலகி பல்லத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் முச்சக்ரவண்டியில் பயனித்த ஜந்து பேர் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் இந்த விபத்து 16.03.2019.சனிகிழமை விடியற்காலை 06மணி அளவில் இடம்பெற்றதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்

பதுளையில் இருந்து சிவனொளிபாத மலையை தர்சிக்கவந்தவர்களே இந்த விபத்தில் சிக்குண்ட தாகவும் குறித்த முச்சக்கர வண்டியில் ஜந்து பேர் பயனித்துள்ளதாகவும் இந்த முச்சக்கர வண்டியில் நான்கு பேர் பெரியோர்களும் ஒரு குழந்தை உட்பட ஜந்து பேர் பயனித்துள்ளதாகவும் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

குறித்த பகுதியில் விபத்து ஏற்பட்டதை அறிந்த பிரதேச மக்கள் நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கியதையடுத்து காயங்களுக்குள்ளான ஜந்துபேரும் டிக்கோயா ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு சென்று தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலையின் வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேலை விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம்
ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த நோர்வூட் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது