புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் ஜனநாயகத்தை கட்டிகாப்பார்கள் என தாம் நம்புவதாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியை நம்பி தமிழ் மக்கள் ஏமாந்து போனதாகவும் இனியும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்டத்திற்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிதாக பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச பாரியளவில் வடக்கை அபிவிருத்தி செய்வார். அதை நாம் உறுதியாக நம்புகிறோம். மேலும், அதிகாரப் பகிர்வு என்பதை ஒரு இரவில் செய்ய முடியாது. அது கட்டம் கட்டமாக செயற்படுத்தப்பட வேண்டும்.

பொலிஸ் அதிகாரம் தொடர்பாக அவர் வேறு விதிமுறையை கையாள முயற்சி செய்கிறார். அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் மத்தியில் போலியான பீதியை அரசியல்வாதிகள் ஏற்படுத்தினார்கள். இவர் ஜனாதிபதியாக பதவியேற்றால் மீண்டும் வெள்ளை வான் வரும். தமிழ் மக்களை கொன்று குவிப்பார் என கூறினார்கள் என வரதராஜ பெருமாள் குறிப்பிட்டார்.