இலங்கை பிரதான செய்திகள்

அனைத்து விதமான புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு

இலங்கையில் அனைத்து விதமான புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பிற்பகல் 3.30 மணிமுதல் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6 மணி முதல் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்றைய நாளுக்கான இறுதி புகையிரதமானது கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ நோக்கி பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் சகல அதிவேக பாதைகளும் இன்று மாலை 4 மணிமுதல் மூடப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சமிந்த அதுலுவகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை பொலிஸ் அதிகாரிக்கு லண்டன் பெண் செய்த காரியம் ~அதிகாரி வைத்தியசாலையில் !

மயூனு

பதவிகளை பெற்று கொள்ள வரிசையில் நின்ற சட்டதரணிகள் ~இன்று மாயம் ~சஜித் மூக்குடைப்பு !

மயூனு

கோட்டாவின் தொலைபேசி அழைப்பினால்ஏற்பட்ட அதிரடி மாற்றம் !

மயூனு

Leave a Comment