இலங்கை

அன்டன் பாலசிங்கத்தின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் கிளிநொச்சியில்!{படங்கள்}

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் தமிழர் தாயகத்தின் பல இடங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. 
அந்த வகையி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வொன்று கிளிநொச்சியில்  இன்றைய தினம் இடம்பெற்றது.

கிளிநொச்சியில் உள்ள தமிழரசுக் கட்சியின்  அறிவக அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின்  ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது
காலை பத்து மணியளவில் இடம் பெற்ற இன் நிகழ்வில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து விளக்கேற்றி மலர் அஞ்சலி செய்யப்பட்டதுடன் நினைவுரைகளும் இடம்பெற்றது

\குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ,சி.சிறிதரன் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான குருகுலராஜா பசுபதிப்பிள்ளை பிரதேச சபை தவிசாளர்களான வேழமாலிதன்,சுரேன் பிரதேச சபை உறுப்பினர்களான ஜீவராஜா,சாந்தி , சிவமோகன்,நந்தகுமார், சத்தியாணந்தன்,கலைவாணி மற்றும் கட்சி ஆதரவாளர்கள் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

வட மாகாண மக்களுக்கு பேருந்து பயணத்தின்போது இனிமேல் சிக்கல் இருக்காது – மகிழ்ச்சியான செய்தி!

venuja

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகள் வெளியாகின

venuja

பாதுகாப்பு அமைச்சை பொறுப்பேற்க தடை ~நீதிமன்றத்தை நாடும் கோட்டா!

மயூனு

Leave a Comment