இடுப்பும் வயிறும் வலிப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு வந்த நபர் ஒருவருக்கு ஸ்கேன் எடுத்துப்பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ப்ளோரிடாவைச் சேர்ந்த மன நல பாதிப்புடைய அந்த 46 வயது நபர், தனது மன நல பிரச்சினைக்கு ஒழுங்காக மருந்து எடுத்துக்கொள்ளாமல் இருந்திருக்கிறார்.

ஒரு நாள் இடுப்பும் வயிறும் வலிப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் அவர்.

மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் ஒன்றை எடுத்தபோது, அவரது ஆசன வாய் வழியாக ஒரு ஸ்குரூ டிரைவரை அவர் செலுத்தியிருந்ததும், அது அவரது சிறுகுடலை சேதப்படுத்தியிருந்ததும் அதனால் அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது.

பாலியல் இன்பத்துக்காக அவர் அந்த ஸ்குரூ டிரைவரை ஆசன வாய்க்குள் செலுத்தியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிகிச்சைக்குப்பின் அவர் மனோவியல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

26 Shares