இலங்கைக்கு பாலம் அமைக்கும் வேலையில் அனுமன் தீவிரமாக இருந்த போது வந்தார் சனி பகவான்.’ஆஞ்சநேயா உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும்.

உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல் அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்’ என்றார்.கடமையை செய்து கொண்டு இருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து கொள்’ என்றார்.சனி பகவானும் ஏறி அமர்ந்தார். கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம்தாங்காமல் சனிபகவான் அலறினார்.
‘சொன்ன சொல் தவறக்கூடாது.

இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்’ என்றார் அனுமன்.அதன் படி சனியும் அமர்ந்தே இருந்தார்.2 1/2 மணி நேரம் முடிந்த பிறகே இறக்கிவிட்டார்.ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன்.

                            ஜெய்ஸ்ரீராம். ஜெய்ஸ்ரீராம்.ஜெய்ஸ்ரீராம்.

278 Shares