இந்தியாவில் ஆப்பிள் Map செயலியில் Navigatio வசதி வழங்கப்படுகின்றது. இந்த அம்சம் பயணங்களில் நடக்கும் போதோ அல்லது கார்களில் பயணிக்கும் போது வழி சொல்கின்றது.

புதிதாக Navigatio வசதி தவிர உபெர் மற்றும் ஒலா போன்றவற்றிலிருந்து கார் முன்பதிவு செய்யும் வசதியும் வழங்குகின்றது. இதனை இயக்க Map செயலயின் Ride Options தேர்வு செய்ய வேண்டும்.

மேலும், பொது போக்குவரத்து சார்ந்த விபரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. அதிகளவு விபரங்களை சேகரித்து சரியான தகவல்களை வழங்கினாலும், கூகுள் Maps சேவையுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் Maps சற்று பின்தங்கியிருக்கின்றது.

பயனர் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியை தெரிவிப்பதோடு குறிப்பிட்ட முகவரியில் பணி நடைபெறும் நேரம், சரியான முகவரி, தொடர்பு விபரங்கள் போன்ற பல்வேறு தகவல்களை வழங்குகின்றது.

இவை தவிர ஆப்பிள் Maps செயலியில் பொது போக்குவரத்து விபரங்கள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளின் முப்பறிமான காட்சி போன்ற வசதிகள் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன.

0 Shares