திருச்சியைச் சேர்ந்த 3 பெண்கள் வீட்டு வேலைக்கு எனப் பொய் சொல்லி அழைத்துச் செல்லப்பட்டு குவைத்தில் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தப்பட்டதாக செய்திகள் எழுந்துள்ளன.

திருவாரூரில் உள்ள வெளிநாட்டு ஏஜெண்ட் ஒருவரின் மூலம் குவைத்தில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக திருச்சியைச் சேர்ந்த 3 பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சென்றதும் அவர்களை பாலியல் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்த முயன்றுள்ளனர்.

அதற்கு ஒத்துக்கொள்ளாததால் சித்ரவதைகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியா திரும்ப வேண்டும் என அவர்கள் சொன்னதை அடுத்து அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்களை அழைத்துச் சென்ற ஏஜெண்ட்டும் உறவினர்களிடம்  முறையான பதிலளிக்காமல் இழுத்தடித்துள்ளார். இதையடுத்து நடந்த விஷயத்தை இந்தியாவில் உள்ள உறவினர்களிடம் சொல்ல அவர்கள் திருச்சி மாவட்ட ஐ.ஜி,யிடம் இதுபற்றி புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலிஸார் திருவாரூரைச் சேர்ந்த ஏஜெண்டுகளை கைது செய்து விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.