விளையாட்டு

இந்திய பிரிமியர் லீக் வீரர்கள் ஏலம் – திட்டமிட்டபடி நடைபெறும்

இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்காரணமாக ஏனைய நிகழ்வுகளைப் போன்று 2020 ஆம் ஆண்டுக்கான இந்திய பிரிமியர் லீக்கின் முதல் கட்ட ஏற்பாடுகள் தொடர்பில் சற்று மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், போராட்டங்கள் இடம்பெற்றாலும் இந்திய பிரிமியர் லீக்கிற்கான போட்டியாளர்களை ஏலமெடுக்கும் நடவடிக்கை திட்டமிடப்படி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் சபை தகவல் வௌியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு நடைபெறும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

73 இடங்களுக்கான இந்த ஏலத்தில் 332 வீரர்கள் இறுதிபட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவுஸ்ரேலியாவின் மெக்ஸ்வெல், தென்னாபிரிக்காவின் ஸ்டெயின் உள்பட 143 வெளிநாட்டு வீரர்களும் இந்த பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.

இந்தநிலையில். கடந்த ஒரு வாரகாலமாக குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக பரவலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இதனால் இந்திய பிரிமியர் லீக் ஏலம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

போராட்டங்கள் நடந்து வந்தாலும் ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் திட்டமிடப்படி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் சபையின் நிர்வாகி ஒருவர் உறுதிபட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எனக்கு ஆலோசனை கூறிய ஓட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவ முடியுமா – தமிழில் டுவிட் செய்த சச்சின்

venuja

ரஷியாவை 2-1 என வீழ்த்தியது ஸ்பெயின்

venuja

பங்களாதேஷ் பிரீமியர் லீக் – குமிலா வோரியஸ் – சாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணிகள் வெற்றி!

venuja

Leave a Comment