வலிதெற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஏழாலையில் அமைக்கப்பட்ட இந்து ஆலயங்களுக்கான வீதி வளைவுகளை இந்துகலாச்சார அமைச்சர் மனோ கணேசன் திறந்து வைத்தார்.

சமூக சேவகர் சிவகாந்தனின் தனிப்பட்ட நிதி மூலம் ஏழாலையில் அமைந்துள்ள இரண்டு வைரவர் ஆலயங்களுக்கான வீதிவளைவுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வீதி வளைவுகளே இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கூட்டுறவாளர் செல்வகாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்துகலாச்சார அமைச்சர் மனோ கணேசன், வலிதெற்கு பிரதேச சபைத் தலைவர் க.தர்சன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலய வீதி வளைவுகளைத் திறந்து வைத்தனர்.

21 Shares