தொழில்நுட்பம்

இனி அந்த போன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது

வாட்ஸ்அப் செயலியை இனிமேல் அந்த போன்களில் மட்டும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

வாட்ஸ்அப் செயலியினை இனிமேல் அதாவது ஜனவரி 1, 2020 முதல் விண்டோஸ் போன் இயங்குதளங்களில் இயங்காது. அந்த வகையில் விண்டோஸ் போன் தளத்தின் எந்த பதிப்பை பயன்படுத்துவோரும், அதில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த இயலாது.

உலகம் முழுக்க வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 150 கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் மட்டும் இந்த செயலியை சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். விண்டோஸ் போன் தவிர ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.3.7 பதிப்பு, ஐ.ஒ.எஸ். 8 இயங்குதளம் கொண்ட சாதனங்களில் வாட்ஸ்அப் செயலியை பிப்ரவரி 1, 2020 முதல் பயன்படுத்த முடியாது.

சேவை நிறுத்தப்படும் பட்சத்தில் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து விண்டோஸ் போன் தளத்தில் பயன்படுத்த முடியும். எனினும், செயலிக்கான அப்டேட் மற்றும் பாதுகாப்பு பிழை எதுவும் சரி செய்யப்பட மாட்டாது. 

“இந்த இயங்குதளங்களுக்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்பதால், இவற்றில் உள்ள அம்சங்கள் எப்போது வேண்டுமானாலும் இயங்காமால் போகலாம்,” என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்தே வாட்ஸ்அப் செயலி மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் டவுன்லோடு செய்ய கிடைக்காமல் இருந்தது. விண்டோஸ் போன் தளங்களின் மேம்பட்ட பதிப்பான விண்டோஸ் 10 சேவைக்கான ஆதரவு ஜனவரி 14, 2020 முதல் நிறுத்தப்பட இருக்கிறது. இதனால் இந்த தளத்திற்கு எவ்வித பாதுகாப்பு அப்டேட்களும் அடுத்த மாத துவக்கத்தில் இருந்தே வழங்கப்படாது.

Related posts

இரண்டு வேரியண்ட்களில் உருவாகும் ஐபோன் எஸ்.இ. 2

venuja

2020 ஐபோன் 5ஜி வேரியண்ட் விலை விவரம்

venuja

விலை உயர்வு காரணமாக ரூட்டை மாற்றும் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள்

venuja

Leave a Comment