தொழில்நுட்பம்

இனி மெசஞ்சர் சேவையை அப்படி பயன்படுத்த முடியாதா?

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் சேவையை இனிமேல் வாடிக்கையாளர்கள் அப்படி பயன்படுத்த முடியாது. முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் சேவையில் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் கொண்டு சைன்-அப் செய்யும் வசதியினை சத்தமில்லாமல் நீக்கி இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் இனி மெசஞ்சர் சேவையை பயன்படுத்த தங்களது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டினை பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகியுள்ளது.

புதிய விதிமுறை ஃபேஸ்புக் மெசஞ்சர் மற்றும் மெசஞ்சர் லைட் சேவைகளுக்கும் பொருந்தும். புதிதாக மெசஞ்சர் சேவையை பயன்படுத்துவோர் இனி தங்களது ஃபேஸ்புக் அக்கவுண்ட் கொண்டு சைன் இன் செய்ய வேண்டி இருக்கும் ஃபேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

தற்சமயம் மெசஞ்சர் சேவையை ஃபேஸ்புக் அக்கவுண்ட் மூலம் சைன் இன் செய்தவர்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படாது. மேலும் அக்கவுண்ட் இல்லாமல் மெசஞ்சர் சேவையை பயன்படுத்துவோருக்கும் எந்த மாற்றமும் இருக்காது.

புதிய மாற்றம் காரணமாக சில வாடிக்கையாளர்கள் தங்களது ரெடிட் கணக்கில் மெசஞ்சர் சேவையை பயன்படுத்துவதற்கான வசதி நிராகரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்து இருந்தனர். இவர்கள் செயலியில் ஏதேனும் பிழை அல்லது மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக்கின் முன்னணி குறுந்தகவல் சேவைகளான மெசஞ்சர், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்கும் திட்டத்தின் கீழ் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Related posts

சாம்சங் 2020 ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் பெயர் மாற்றப்படுவதாக தகவல்

venuja

அமெரிக்க சான்று பெற்ற மோட்டோ ஸ்மார்ட்போன்

venuja

இலங்கையிலும் நாளை தென்படவுள்ளது அரிய காட்சி! யாழிற்கு படையெடுக்கும் மக்கள்!

venuja

Leave a Comment