மேஷம்: சுற்றுப்புற சூழ்நிலை தொந்தரவு தரலாம். பின்விளைவு உணர்ந்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தோர் உதவிகரமாக நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

ரிஷபம்: சிலர் உங்களிடம் உதவி கேட்பர். இயன்ற அளவில் உதவி புரிந்து நற்பெயரை பாதுகாத்திடுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு அவசியம். நிலுவைப்பணம் வந்து சேரும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

மிதுனம்: கடந்த நாட்களில் இருந்த சிரமம் விலகும். செயல்களில் உத்வேகமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி இனிதே நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.

கடகம்: எதார்த்தமாக பழகுவீர்கள். நண்பரின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலமான விஷங்களை பாதுகாக்க வேண்டும். முக்கிய செலவுகளுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். பெண்கள் தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

சிம்மம்: சந்தோஷ எண்ணங்களால் உற்சாகம் பெறுவீர்கள். பிறருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க புதிய அனுகூலம் உருவாகும். தாராள பணவரவு உண்டு. வீட்டை அழகுபடுத்த கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள்.

கன்னி: குடும்ப விஷயம் பிறரிடம் பேச வேண்டாம். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் சிரமம் ஓரளவு குறையும். அளவான பணவரவு கிடைக்கும்.. ரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும்.

துலாம்: உங்கள் அணுகுமுறையில் நல்ல மாற்றம் ஏற்படும். விலகிய உறவினர் விரும்பி வந்து சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். நிலுவைப் பணம் வசூலாகும். விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.

விருச்சிகம்: நண்பரின் மனம் நிறைந்த வாழ்த்து கிடைக்கும். செயல்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவு உண்டு. வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

தனுசு: உங்களின் தன்மானத்து சோதனை வரலாம்; மனஅமைதியை பாதுகாப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை சரி செய்விர்கள். அளவான பணவரவு கிடைக்கும். மின்சார உபகரணங்களை கவனமுடன் பயன்படுத்த வேண்டும்.

மகரம்: சிலர் உங்களை ஒரு கருவியாக பயன்படுத்த எண்ணுவர்; கவனமுடன் பேசுவதால் சிரமம் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கை அடைய புதியமுயற்சி வேண்டும். எதிர்பார்த்த பணவரவில் தாமதம் ஏற்படும். வாகனத்தில் மிதவேகம் நல்லது.

கும்பம்: உங்களின் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி நிறைவேறும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மீனம்: தாயின் அன்பில் ஆசியில் மனதில் உற்சாகம் ஏற்படும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்து மகிழ்வீர்கள்.

6 Shares