மேஷம்: செயல்களில் தைரியம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணக்கடனில் ஒருபகுதி செலுத்துவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். 

ரிஷபம்: எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். குடும்ப உறுப்பினர்களிடம், வாக்குவாதம் கூடாது. தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை தொந்தரவு தரலாம். புதிய வழிகளில் பணச்செலவு அதிகரிக்கும்.

மிதுனம்: மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்ய கூடுதல் பணம் தேவைப்படும். நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் சீராகும். பொருட்கள் இரவல் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.

கடகம்: செயல்களில் நிதானத்தை கடைப்பிடிப்பீர்கள். எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரி பணவருமானம் பெறுவீர்கள். வெகுநாள் விரும்பிய பொருள் வாங்குவீர்கள்.

சிம்மம்: வெளி வட்;டார தொடர்பு, தொந்தரவு தரலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக, புதிய யுக்தி பயன்படுத்துவது நல்லது. மிதமான அளவில் பணவரவு இருக்கும். வெளியூர் பயண திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள்.

கன்னி: உங்கள் பேச்சில் அன்பும், பண்பும் மிகுந்திருக்கும். நண்பர் உ;றவினர் உங்களை மதிப்புடன் நடத்துவர். தொழில், வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை பெற நல்யோகம் உண்டு.

துலாம்: உங்களின் சிரமத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். கஷ்ட சூழ்நிலை மெல்ல சரியாகும். தொழில் வியாபாரத்தில் அனுகூலம் பாதுகாக்க வேண்டும. சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

விருச்சிகம்: மனதில் கலை உணர்வு அதிகரிக்கும். அலைக்கழிப்பு உருவாக்கிய வேலை, ஆதாயம் தருவதாக மாறும். தொழில், வியாபாரத்தின் வளர்ச்சியை பார்த்து பலரும் வியப்படைவர். உபரி பணவருமானம் கிடைக்கும். இயலாதவர்களுக்கு உதவுவீர்கள்.

தனுசு: உங்கள் செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். பழகுபவர்களின் மனம் அறிந்து பேசுவீர்கள். தொழில், வியாபார வளாச்சிக்கான தேவை நிறைவேறும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.

மகரம்: சிலரது அதிருப்தியை பெறுகிற நிலை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற சிலமாற்றம் செய்வது அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.

கும்பம்: மனதில் சங்கடம் ஏற்படலாம். எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இடையூறை தாமதமின்றி சரி செய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். பயன் தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம். 

மீனம்: தாமதமான செயல் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் வளர்ச்சி நம்பிக்கையை ஏற்படுத்தும். .பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். கூடுதல் பொருள் சேர்க்கை பெறுவீர்கள். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

8 Shares