மேஷம்: பணி நிரந்தரம் பற்றிய நல்ல தகவல் வந்து சேரும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிய சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு.

ரிஷபம்: கலகலப்பான நாள். கல்யாணக் கனவுகள் நனவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. மாலையில் வரும் தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.     

மிதுனம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டுத் தொழில் தனித்த தொழலாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். நிலையான வரு மானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.  

கடகம்: யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உள் ளத்தில் அமைதி குறையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வரவிற்கு மீறிய செலவுகளால் வாட்டம் ஏற்படும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவதில் தடங்கல்கள் உருவாகலாம்.  

சிம்மம்: சுயமுயற்சியின் மூலம் சுகம் காணும் நாள். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். விறுவிறுப்பாக செயல்படுவீர்கள். மனக்கசப்புகள் மாறும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.       

கன்னி: மனக்கலக்கம் ஏற்படும் நாள். பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறை ஏற்பட லாம். எடுத்த செயல்களை முடிக்க அதிக அலைச்சல் ஏற்படும். மற்றவர்களை நம்பிச் செயல்படுவதைத் தவிர்ப்பது நல்லது.    

துலாம்: நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்துதவுவர். திருமணப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன் றும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.    

விருச்சிகம்: விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணங்களால் பால்ய நண்பர்களின் சந்திப்பு கிட்டும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். 

தனுசு: கவுரவம், அந்தஸ்து உயரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாகப் பூர்த்தியாகும். பிள்ளைகளின் திறமை யான செயல்பாடுகளைப் பார்த்துப் பெருமைப் படுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.   

மகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். பிள்ளை களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சொத்து விற்பனையால் வரும் ஆதாயத்தை தொழிலில் முதலீடு செய்வது பற் றிய சிந்தனை மேலோங்கும் உடல்நலம் சீராகும்.

கும்பம்: வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். மதிய நேரத்தில் மங்கலச் செய்திவந்து சேரும். மதில்மேல் பூனையாக இருந்த நிலை மாறும்.   

மீனம்: பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். ஆதாயம் தரும் செயலில் அக்கறை காட்டுவீர்கள். பொருள் வரவு திருப்தி தரும். தொழில் ரீதியாக தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்துதவுவர்.     

67 Shares