மேஷம்: தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். சுபசெய்தி வந்து சேரும். பெண்கள் புத்தாடை, ஆபரணம் வாங்குவர்.

ரிஷபம்: உங்கள் செயலில் கவனச் சிதறல் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி அதிகரிக்கும். பணவரவு பெறுவதில் தாமதம் இருக்கும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.   

மிதுனம்: எதிர்பார்ப்பு நிறைவேற தாமதமாகலாம். தொழில், வியாபாரம் சீர்பெற நவீன மாற்றம் செய்ய வேண்டியதிருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். நண்பரால் உதவி கிடைக்கும்.

கடகம்: முக்கிய செயல் சிறப்பாக நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும்.   

சிம்மம்: குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்கு கூடும். செயல்களில் உற்சாகம் நிறைந்திருக்கும். தொழில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு கிடைக்கும். பணவரவும், நன்மையும் அதிகம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.
 

கன்னி: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். சுயகவுரவம் பாதுகாக்க முயல்வீ்ரகள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராக இருக்கும். ஆதாயம் மிதமாக கிடைக்கும். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்றவும்.

துலாம்: சமயோசிதமாக செயல்பட்டு நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக பணிபுரிவீர்கள். பணவரவு திருப்தியளிக்கும். திடீர் செலவால் சேமிப்பு கரையும். வீடு மற்றும் வாகனப் பாதுகாப்பில் அதிக கவனம் தேவை.

விருச்சிகம்: மங்கள நிகழ்வுகளால் இனிமை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி ஏற்படும். லாபம் அதிகரிக்கும். நண்பரால் உதவி உண்டு. பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். பிள்ளைகளின் நற்செயல் பெருமை சேர்க்கும்.  

தனுசு: வாக்குறுதி நிறைவேற்றுவதில் தாமதம் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். லாபம் மிதமாக அமையும். உறவினர் வகையில் செலவு செய்ய நேரிடலாம். சீரான ஓய்வு உடல்நலனைப் பாதுகாக்க உதவும்.  

மகரம்: சமூகப் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தெய்வ அனுகூலத்தால் முக்கிய செயல் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும்.தாராள பணவரவில் சேமிப்பு கூடும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

கும்பம்: தன்மானத்திற்கு சோதனை வரலாம். தொழில் சார்ந்த இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வது நல்லது. பணவரவை விட செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும்.   

மீனம்: தைரியத்துடன் எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திருப்திகரமான வளர்ச்சி உண்டாகும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். விருந்து விழாவில் பங்கேற்க வாய்ப்புண்டு.     

72 Shares