மேஷம் : சமூக நிகழ்வுகள் அதிருப்தி தரலாம். சுய அந்தஸ்து பாதுகாப்பதில், உரிய கவனம் வேண்டும்.தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும்.கூடுதல் உழைப்பால் பணவரவு சீராகும். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

ரிஷபம் : பிறருக்கு உதவுவதால் மறைமுக சிரமம் ஏற்படலாம்.செயல்கள் நிறைவேற சுறுசுறுப்பு அவசியம்.தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். முக்கிய செலவுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள்.பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

 
மிதுனம் : எதிர்கால வாழ்வில் புதிய நம்பிக்கை ஏற்படும். தொழில் வளம் பெற இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நிற்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு பெற அனுகூலம் வளரும்.

கடகம் : உங்களின் சிறிய முயற்சியும், அதிக வெற்றியைத் தரும்.விலகிச் சென்ற நண்பர் விரும்பி அன்பு பாராட்டுவார்.தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணிபுரிவீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

சிம்மம் : வழக்கத்திற்கு மாறான பணி தொந்தரவு தரலாம்.தொழில், வியாபார நடைமுறை சீராக நண்பரின் உதவி கிடைக்கும்.நிர்பந்தத்தின் பேரில் பொருள் வாங்க வேண்டாம்.அளவான பணவரவு கிடைக்கும்.மாணவர்கள் படிப்பில் கூடுதல் பயிற்சி பெறுவர்.

கன்னி : உங்களின் எதார்த்த பேச்சு, பிறர் மனதை சங்கடப்படுத்தும்.தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும்.புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம். மருத்துவ சிகிச்சை உடல் நலம் பெற உதவும்.

துலாம் : உயர்ந்த எண்ணங்களை செயல்படுத்துவீர்கள்.தொழில், வியாபாரம் செழிக்க, புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள்.உபரி பணவருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.

   
விருச்சிகம் : நீங்கள் பொது பிரச்னையில் கருத்து சொல்ல வேண்டாம்.இதனால், இருக்கிற நற்பெயரை பாதுகாத்துக் கொள்ளலாம்.தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதல் பணிபுரிவீர்கள்.புதிய இனங்களில் செலவு அதிகரிக்கும்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். 

தனுசு : உங்கள் உழைப்பின் அருமையை நண்பர், உறவினர் பாராட்டுவர்.மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும்.புதிய வாகனம் வாங்கலாம்.

மகரம் : சிலர் சொல்லும் அறிவுரை சங்கடம் உருவாக்கும்.மனசாட்சிக்கு முக்கியத்துவம் தந்து செயல்படுவீர்கள்.தொழில், வியாபாரத்தில் அதிகம் பணிபுரிவது அவசியமாகும். பணவரவை விட செலவு அதிகரிக்கும்.இஷ்டதெய்வ வழிபாடு நன்மை தரும்.

 

  கும்பம் : பொறுமையுடன் செயல்படுவீர்கள்.தொல்லை கொடுத்தவர் இடம் மாறி போவர். தொழில், வியாபார வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். எதிர்கால தேவைக்கு கொஞ்சம் பணம் சேமிப்பீர்கள்.அரசியல்வாதிகளுக்கு அரசு உதவி பெற அனுகூலம் வளரும்.

மீனம் : செயல்களில்; நேர்மையை பின்பற்றுவீர்கள்.பலரும், உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வர்.தொழில், வியாபார வளர்ச்சி சீரான முன்னேற்றம் தரும். கூடுதல் பணவரவு கிடைக்கும். சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள்.

33 Shares