மேஷம் : மனதில் தெய்வீக சிந்தனை வளரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். கூடுதல் பணவரவில் வாழ்க்கைத் தரம் உயரும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம் : உங்களின் தேவையை நிறைவேற்ற ஆர்வம் கொள்வீர்கள். முக்கியமான விஷயம் மறந்து போகலாம். தொழில், வியாபாரத்தில் நிதானம் பின்பற்றுவது நல்லது. குடும்பத்திற்கான பணச்செலவு அதிகரிக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

மிதுனம் : பணிகளை, கூடுதல் கவனத்துடன் நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறையில் பின்பற்றுகிற சூட்சுமம் பிறரிடம் சொல்ல வேண்டாம். அளவான பணவரவு கிடைக்கும்.குடும்பத்தின் தேவை அதிகரிக்கும். மனைவி சேமிப்பு பணம் தந்து உதவுவார்.

கடகம் : உங்கள் செயல்களில் சத்தியத்தின் தன்மை நிறைந்திருக்கும். நண்பரிடம் பெற்ற உதவிக்கு நன்றி சொல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திருப்திகரமான வளர்ச்சி உருவாகும். உபரி பணவருமானம் கிடைக்கும். கூடுதல் சொத்து சேர்க்கை கிடைக்கும்.

சிம்மம் : உங்கள் மனம், செயலில் உற்சாகம் நிறைந்திருக்கும். நண்பர்களிடம் கலை உணர்வுடன் பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும்.புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கன்னி : உங்கள் மனதில் சோம்பல் குணம் ஏற்படலாம். முக்கியமான பணியை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள சிரமம் பிறரிடம் விவாதிக்க வேண்டாம். தொலைதூர பயணத்தில் மாறுதல் செய்வீர்கள். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.

துலாம் : உங்கள் எண்ணம், செயலில் சில மாறுதல் இருக்கும்.எதிர்மறையாக பேசுபவர்களிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நேரம் தவறாமையை அவசியம் பின்பற்ற வேண்டும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

விருச்சிகம் : முன்யோசனையுடன் செயல்படுவீர்கள்.திட்டமிட்ட காரியம், இலகுவாக நிறைவேறும்.தொழில், வியாபாரத்தின் அபிவிருத்தியை பார்த்து பலரும் வியப்படைவர். ஆதாய பணவருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும்.

தனுசு : வீண் பேச்சு பேசுபவரிடம் விலகவும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய யுக்தி பயன்தரும். அளவான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். தியானம், தெய்வ வழிபாடு செய்வீர்கள்.

மகரம் : உங்கள் பேச்சு, செயலில் வசீகரம் இருக்கும். பழகுபவர் நல்ல அபிப்பிராயம் கொள்வர். தொழில், வியாபாரம் செழிக்க தகுந்த பணிபுரிவீர்கள். பணவரவில் லாப விகிதம் அதிகரிக்கும். மாமன், மைத்துனருக்கு உதவுவீர்கள்.


  கும்பம் : பொறாமை எண்ணம் உள்ளவர்களிடம் பேச வேண்டாம்.தொழில், வியாபாரத்தில் வேலைப்பளு அதிகரிக்கும் கூடுதல் உழைப்பால் நிலைமை சீராகும். கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். வாகனப்பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

மீனம் : ஆர்வமிகுதியால் கவித்துவமாக பேசுவீர்கள். எதிரியால் இருந்த தொல்லை குறையும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். நிலுவைப்பணம் வசூலாகும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

28 Shares