ஆன்மீகம் ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 2019.11.14 ~ இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மேஷம்: சுற்று புற சூழ்நிலைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பண வரவை விட செலவு அதிகரிக்கும். நண்பரின் உதவி மனதில் நம்பி க்கை தரும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.

ரிஷபம்: பணிகளில் மதி நுட்பத்துடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார தொடர்பு பலம் பெறும். தாராள பண வரவு கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக் கியம் சீராகும்.

மிதுனம்: நேரத்தின் அருமையை உணராமல் வீணாக பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூல தனம் போதும். உணவு பொருள் தரம் அறிந்து உண்ண வேண்டும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

கடகம்: நண்பரின் உதவியால் மனம் நெகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. பண கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். விரும்பிய உணவு உண்டு மகிழ் வீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

சிம்மம்: நண்பரின் ஆலோசனை நன்மை தரும். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். பண வரவில் திருப்திகரமான நிலை உண்டு. உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நித்திரையில் இனிய கனவு வரும்.

கன்னி: சிலரது பேச்சு உங்கள் மனதை சங்கடபடுத்தும். தொழிலில் வளர்ச்சிக்கான வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தவும். புதிய இனங்களில் செலவு அதிகரிக்கும். வெளியூர் பயண திட்டத் தில் மாறுதல் செய்வீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் வேண்டும்.

துலாம்: திட்டமிட்ட பணியை சமயோசிதமாக நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

விருச்சிகம்: எதிர்பார்த்த நற்பலன் எளிதாக கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். நிலுவை பணம் வசூலாகும். உறவினர்களுடன் இனிய சந்திப்பு ஏற்படும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.

தனுசு: அக்கம் பக்கத்தவர் கூடுதல் அன்பு பாராட்டுவர். உற்சாக மனதுடன் பணிகளில் ஈடுபடு வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். தாராள பண வரவில் சேமிப்பு கூடும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

மகரம்: சிலரது மாறுபட்ட பேச்சினால் உங்கள் செயலில் குளறுபடி ஏற்படலாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக கவனம் அவசியம். பண வரவை சிக்கனமாக செலவு செய் வீர்கள். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை உதவும்.

கும்பம்: மனதில் சங்கடம் உருவாகலாம். குடும்ப உறுப்பினர்களிடம் அதிருப்தியுடன் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு தாமதமாக நிறைவேறும். அளவான பண வரவு கிடைக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

மீனம்: உங்கள் மனதில் அன்பும், கருணையும் அதிகரிக்கும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. வெகு நாள் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

Related posts

நீங்கள் 1 ஆம் எண் எண்ணில் பிறந்தவரா? இந்த எண்ணில் பிறந்தவரை திருமணம் செய்தால் வாழ்க்கையே நரகமாகிவிடுமாம்!

venuja

2020 புத்தாண்டு பலன்கள்… மீனம் ராசிக்காரர்களுக்கு கவனம் வேண்டுமா?

venuja

இன்றைய ராசி பலன் 2019.12.15 ~ இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மயூனு

Leave a Comment