தொழில்நுட்பம்

இரண்டு வேரியண்ட்களில் உருவாகும் ஐபோன் எஸ்.இ. 2

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் சற்றே விலை குறைந்த ஐபோன் மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவை ஐபோன் எஸ்.இ. 2 பிராண்டிங் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய ஐபோன் வெளியீட்டு விவரங்கள் உறுதியாகாத நிலையில், ஐபோன் எஸ்.இ. 2 பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி இம்முறை ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போனினை இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவை ஐபோன் எஸ்.இ. 2 மற்றும் ஐபோன் எஸ்.இ. 2 பிளஸ் என்ற பெயரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றில் முதல் மாடலில் 4.7 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் இது பார்க்க ஐபோன் 8 போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் ஐபோன் 11 சீரிஸ்களில் வழங்கப்பட்ட ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் டச் ஐ.டி. கைரேகை சென்சார், 3 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம்.

புகைப்படங்களை எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா வழங்கப்படலாம். ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போன் சமீபத்தில் 3சி சான்று மற்றும் 5வாட் சார்ஜர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடல் இந்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படலாம். இதன் துவக்க விலை 450 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 32,500) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

ஐபோன் எஸ்.இ. 2 பிளஸ் மாடலிலும் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படலாம். எனினும், இதன் டிஸ்ப்ளே அளவு 5.5 இன்ச் அல்லது 6.1 இன்ச் வரை வழங்கப்படலாம். இந்த ஐபோன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Related posts

சத்தமில்லாமல் இந்தியாவில் அறிமுகமான சாம்சங் ஸ்மார்ட்போன்

venuja

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

venuja

வட்ஸ் அப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு : பயனர்களுக்கு எச்சரிக்கை!!

venuja

Leave a Comment