இலங்கை

இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான இரகசிய முக்கிய ஆவணங்கள் ஐ.நாவிடம் ~கதி கலங்கி நிற்கும் அரசு !

இலங்கையில் நடந்த படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான இரகசிய அறிக்கைகள் 2016ஆம் ஆண்டு முதலே ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குற்ற விசாரணை திணைக்களத்தின் பரிசோதகர் நிஷாந்த சில்வா மேற்கொண்ட விசாரணை அறிக்கைகளே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த இரகசிய அறிக்கைகளை மனித உரிமை ஆணைக்குழுவில் தான் கண்டதாக முன்னாள் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் செய்த் ராத் ஹுசைன் ஏற்றுக் கொண்டுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கம் அது தொடர்பில் எந்தவொரு விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பான இரகசிய ஆவணம் முதலில் ஜெனீவாவிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இரகசிய பொலிஸ் விசாரணைகள் தொடர்பான 100 இரகசிய ஆவணங்கள் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஸ்மின் சுகாவிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மன்னாரில் பாழடைந்த கிணற்றில் விழுந்த யானை நீண்ட நேர போராட்டத்தின் பின் மீட்பு-(படங்கள் )

venuja

விளையாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் ~10 மாதங்கள் கழித்து விடுதலையான அவலம் !

மயூனு

கிளிநொச்சியில் கசிப்பு வேட்டையில் இளைஞர்களுடன் இணைந்து தூள் கிளப்பும் பெண்கள் !

மயூனு

Leave a Comment