இலங்கை பிரதான செய்திகள்

இலங்கை ஜானதிபதியை சந்திக்க பறந்து வந்த நாடுகளின் தூதுவர்கள்!(படங்கள்)

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான் – ASEAN) நாடுகளின் தூதுவர்கள் குழுவினர் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தனர்.

தாய்லாந்து, இந்தோனேசியா, மியன்மார், வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் கொன்சியுலர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், அவர்கள் முதலில் தமது வாழ்த்துகளை ஜனாதிபதிக்கு தெரிவித்தனர்.

இலங்கைக்கும் தமது நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடர்புகளை விருத்தி செய்தல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடியதுடன், இதற்காக தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனவும் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

மேலும் பிராந்திய ஒத்துழைப்பினை மேம்படுத்தி எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுதல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

Related posts

வடகிழக்கில் இனி தமிழ் மொழிக்கு முன்னுரிமை !

மயூனு

கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கு வைக்கப்பட்ட ஆப்பு

venuja

பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர் !

மயூனு

Leave a Comment