இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கூட வருகிறது. என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த விசேட தேசிய சபை கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிலைப்பாடு தொடர்பாக ஆராய்ந்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

இதேவேளையில் அன்று மாலை தேசிய சபை தீர்மானத்தை அறிவிக்கும் விசேட தோட்ட கமிட்டி தலைவர்கள் தலைவிகள் வாலிபர் சங்க தலைவர்கள் மற்றும் காங்கிரஸின் செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் தேசிய சபையின் தீர்மானத்தை வெளியிட உள்ளார் எனவும் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

9 Shares