ஆப்பிள் நிறுவனம் இவ்வருடத்திற்கான (2019) ஐபோன் தெரிவுகளை அறிமுகம் செய்வதற்கு முன் புதிய ஐபேட் சாதனங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் ஐபேட் மினி 5 மற்றும் புதிய என்ட்ரி-லெவல் ஐபேட் தெரிவுகளில் ஒன்றை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்த்துள்ளது.

ஐபேட் மினி 4 தெரிவின் மேம்படுத்தப்பட்ட டெப்லெட் சாதனம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முதல் ஐபேட் மினி, 4 கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் இரண்டு என்ட்ரி-லெவல் ஐபேட் தெரிவுகளை இந்த ஆண்டில் அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளது. இவற்றில் ஐபேட் மினி 5 மற்றும் என்ட்ரி-லெவல் ஐபேட் உள்ளிட்டவை இந்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகமாகவுள்ளது.

புதிய ஐபேட் தெரிவுகளின் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஏற்கனவே வெளியான தகவல்களின்படி ஐபேட் மினி 5 தெரிவில் செங்குத்தாக பொருத்தப்பட்ட Dual primary camera set மற்றும் Headphone jack உள்ளிட்டவை வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ, கடந்த ஆண்டு வெளியிட்ட தகவல்களின்படி, புதிய ஐபேட் மினி 5 டெப்லெட் 2019 கோடை காலத்தில் அறிமுகமாகும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Shares