இ.தொ.காவுடைய  நான்கு கட்டவுட்களுக்கு இனந் தெரியாதவர்களால் சேதம் பொலிஸ்நிலையத்தில் முறைபாடு

பொகவந்தலாவ நகரில் பொருத்தபட்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்ரசின் நான்கு பெயர்பலகைகளுக்கு இனந்தெரியதவர்களால் சேதம் ஏற்படுத்தபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 17.03.2019ஞாயிற்றுகிழமை
விடியற்காலை 12.45மணி அளவில் குறித்த பெயர்பலகைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

இதேவேளை பொகவந்தலாவ நகரில் பொருத்தபட்டிருந்த நான்கு பெயர்பலகைகளையும் சேதபடுத்தியதை தொடர்பில் நோர்வுட் பிரதேசசபையின் தவிசாளர் ரவிகுழந்தைவேல் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ள தாகவும் விடியற்காலை 12.45மணி அளவில்  இனந் தெரியாவர்கள் சிலர் நீல நிறமுடைய முச்சக்கர வண்டியில் பொகவந்தலாவ நகரில் நடமாட்டம் மேற்கொண்ட காட்சியிகள் பொகவந்தலாவ நகரில் பொருத்தபட்டிருந்த சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் குறித்த நேரத்தில் வர்த்தக நிலையம் ஒன்று திறந்து இருந்ததாகவும் தவிசாளர் பதிவு செய்யபட்டுள்ள முறைபட்டில் இருந்து தெரியவந்துள்ளது

இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்த உருபடம் கொண்ட பெயர் பலகைகளும் மற்றும் நோர்வுட் பிரதேசசபையின் தவிசாளர் ரவி குழந்தை வேல் ஆறுமுகன் தொண்டமான் இணைந்த உருவபடங்கள் கொண்ட பெயர் பலகைகளை இவ்வாறு சேதபடுத்தபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது

இதேவேலை குறித்த பெயர்பலகைகளை சேதபடுத்திய இனந் தெரியதா சந்தேக நபர்கள் பொகவந்தலாவ நகரில் பொருத்தபட்டிருந்த சி.சி.டிவி கேமராக்களை தூணியிட்டு முடிவைத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

எனவே சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யபடவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடதக்கது

0 Shares