கடந்த 26.06.2016ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்த தயானந்தன் , சத்தியசீலன், தர்சன் , சுதர்சன் , றொபின்பிரசாத் , கோபிநாத் , தயாகரன் , குருவிந்தன், காந்தறூபன், பிரபாகரன், றமேஸ் ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அக்காலப் பகுதியில் வழக்கு விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் இல்லை என நிரூபிக்கப்பட்டு 15.03.2019அன்று விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் இவர்கள் இன்னும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அநீதியான முறையில். அடைக்கப்பட்டுள்ளனர் என அறிய முடிகிறது!

இவர்கள் போல பல ஈழ அகதிகளை இந்த உரிமைகள் மறுக்கப்பட்ட சித்திரவதை முகாம்களில் வைத்து இந்திய அரசு தட்டிக் கேட்பார் எவருமின்றி சித்திரவதை செய்கிறது!

தங்களை தமது நாட்டிற்கு அனுப்பி வைக்கக்கோரி உண்ணா நிலைப் போராட்டத்தை கூட இவர்கள் மேற்கொண்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கு அன்னை தமிழகத்தில் இன்னமும் நீதி கிட்டவில்லை! தமிழக உறவுகளே இந்த கொடிய சிறப்பு முகாம்களை மூடக் குரல் கொடுங்கள்.

15 Shares