தமிழகத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து உயிரிழந்த நிலையில், அதில் தப்பிய பெண் ஒருவர் அளித்துள்ள வாக்குமூலம் கண்கலங்க வைத்துள்ளது.

சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த தம்பதி கோவிந்தசாமி(65)-குப்பம்மாள்(60). இந்த தம்பதிக்கு நாகராஜன்(35), ரவி(30) என்ற மகன்களும், கல்யாணி(28) என்ற மகளும் உள்ளார்.

கல்யாணியை ஆறுமுகம் என்பவருக்கும் கோவிந்தசாமி திருமணம் செய்து வைத்துள்ளார்.கோவிந்தசாமி கான்ட்ராக்டராக அப்பகுதியில் 10 பேரை வைத்து சாலை போடும் பணி மற்றும் வீடு கட்டும் பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை ஆறுமுகம், தன் மனைவி கல்யாணியை பார்ப்பதற்காக மாமனார் கோவிந்தசாமி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வீட்டில் இருந்த மாமனார் மனைவி மற்றும் குழந்தைகள் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டில் இருந்த நால்வர் உயிரிழந்த நிலையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கல்யாணி, குழந்தைகள் சர்வேஸ்வரி (8) ,யோகப்பிரியா (6) ஆகியோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

கோவிந்தசாமி, தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து தொழிலுக்காக 80 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். அது வட்டிக்கு மேல் வட்டி சென்றதால், கடன் அடைக்க முடியால் இந்த முடிவை எடுத்தாக தகவல் வெளியானது.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்யாணி, அம்மா, அப்பா மற்றும் உறவினர்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட போது மிகுந்த வேதனையுடன் கண்ணீருடன் காணப்பட்டார்.

அப்போது கல்யாணி பொலிசாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில், எங்களின் திருமணச் செலவுகளுக்காகத்தான் அப்பா வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கினார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அப்பா மற்றும் அண்ணன்களுக்கு வேலை இல்லாததால், அவர்கள் வீட்டிலே இருந்தனர். அதுமட்டுமின்றி வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி மேல் வட்டி சென்றது.

கடன் தொகை அதிகமானது, அந்த கடன் தொகையை அடைக்க, அவர் மேலும் கடன் வாங்கினார். இப்படி கடன் கூடிக் கொண்டே போனதால், ஒரு கட்டத்தில் கடனை அடைக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

எங்கள் வீட்டைப் பொறுத்தவரை, அப்பா எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். கடன் தொகையை கட்ட முடியாமல் அப்பா தவித்ததால், கடந்த 12-ஆம் திகதி அம்மா சமைத்த உணவில் விஷம் கலந்திருப்பதாக கூறினார்.

அப்போது அவர் இத்தனை காலம் நான் இங்கு மரியாதையோடு வாழ்ந்துவிட்டேன், இனி கடன்காரர்களால் நான் மரியாதை இழக்க விரும்பவில்லை, அதனால் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். என் முடிவுக்கு சம்மதிப்பவர்கள் இதை சாப்பிடலாம் என்று கூறினார்.

அப்பா முதலில் சாப்பிட்டார். அதன் பின் அனைவரும் சாப்பிட்டோம், அனைவரும் மயங்கி விழுந்தோம். ஆனால் நான் கணவிழித்து பார்த்த போது, மருத்துவமனையில் இருந்தேன். நானும், என் குழந்தைகளும் எப்படி பிழைத்தோம் என்று தெரியவில்லை என கண்ணீருடன் கூறியுள்ளார்.

5 Shares