சினிமா

என்ன பண்ணாலும் என்ன மட்டும் யாரும் கண்டுக்க மாட்றாங்க.. புலம்பும் வாரிசு நடிகை! யார் தெரியுமா?

சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் கூட அந்த வாரிசு நடிகையை யாரும் கண்டுக்கலயாம் அதான் மேடம் ஒரே அப்செட். வோர்ல்ட் நடிகரின் வாரிசு நடிகையான அவர் நடித்த படங்கள் பல படங்கள் படுதோல்வியை சந்தித்தன.

சரி படங்கள் தான் செட்டாகவில்லை, காதலாவது செட்டாகுமா என்று ஃபாரின் மாப்பிள்ளையை தேடிப் போனவருக்கு சில நாட்கள் லிவிங் டுகெதரில் இருந்து விட்டு அவரும் எஸ்கேப் ஆக மீண்டும் வேறு வழியில்லாமல் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்க முயற்சி செய்து வருகிறார் அந்த வாரிசு நடிகை

அந்த ரெண்டு பேருக்குத் தான் ரெஸ்பான்ஸ்

சமீபத்தில் நடந்த விருது விழா நிகழ்ச்சியில், இந்த வாரிசு நடிகையும் சீவி சிங்காரிச்சு சென்றுள்ளார். ஆனால், நம்பர் நடிகைக்கும், பக்கத்து ஸ்டேட் மருமக நடிகைக்கும் தான் நிகழ்ச்சியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுதாம்.

யாரும் கண்டுக்கல

இவரே வலிய போய் பேசினாலும், பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்கள் கூட இவரை யாருமே கண்டுக்கலயாம். அதனால் அம்மணி பயங்கர அப்செட்டில் இருக்கிறார்

எல்லாமே சொதப்பல்

ஏற்கனவே இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சொதப்பல் ஆன நிலையில், புதிய புதிய ரூட்களை போட்டுப் பார்த்த அம்மணிக்கு எல்லாமே சொதப்பலாக முடிந்து வருகிறதாம்.

யோசிக்கிறாங்க

மறுபடியும் திரைத்துறைக்கு வாரிசு நடிகை கம்பேக் ஆகியுள்ள நிலையில் மற்ற நடிகர்கள் தங்கள் படங்களில் புக் செய்ய மிகவும் யோசிக்கிறாங்களாம். ஏற்கனவே இவர் நடிப்பில் வெளிவந்த முன்னணி நடிகர்களின் படங்கள் எல்லாம் கல்லா கட்டாமல் முடங்கிப் போன நிலையில், மறுபடியும் இவரை ஜோடியாக்க வேண்டாம் என இவரது அழைப்புகளை ஏற்காமல் எஸ்கேப் ஆகி வருகிறார்களாம்.

பிக் பிளான்

வோர்ல்ட் நடிகர் அரசியலில் முழு கவனத்தை செலுத்தி திரைப்படங்களுக்கு முழுக்கு போட்டு விட்டால், அந்த பிக் ஷோவை தானே எடுத்து நடத்தவும் அந்த டிவி நிறுவனத்துடன் பிக் பிளான் போட்டு வாரிசு நடிகை பேசி வருகிறாராம்.

எங்க போய் முடியப்போகுதோ

இப்படி பல மனக் கோட்டைகளை கட்டி வரும் அந்த வாரிசு நடிகைக்கு எப்போது நினைச்சது எல்லாம் நினைச்ச மாதிரி நடக்குமோ இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோன்னு கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சாக இருக்கிறது.

Related posts

வெட்கத்தை விட்டு சொல்கிறேன் சிறு வயதில் எனக்கு அந்த கெட்ட பழக்கம் இருந்தது-நடிகை பளீர்!

Prince

விருது விழாவில் கலக்கலான கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ராகுல் பரீத் சிங், தமன்னா, சமந்தா மற்றும் காஜல் அகர்வால்..!{படங்கள்}

Prince

பிகினி உடையில் நீச்சல் குளத்தில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஷாக்‌ஷி அகர்வால்!{படங்கள்}

Prince

Leave a Comment