இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், தென்னாபிரிக்க அணி 41 ஓட்டங்களால் டக்வெர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாபிரிக்காவின், கேப் டவுனில் பகலிரவு போட்டியாக இடம்பெற்ற குறித்த போட்டியில், ஏன் இப்படி தாடிய வேளையில் மைதானத்தின் மின்விளக்குகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக போட்டியை இடைநிறுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய 5 போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆபிரிக்க அணி 5 – 0 என வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது அதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 56 ஓட்டங்களையும், பிரியமல் பெரேரா 33 ஓட்டங்களையும், இசுரு உதான 32 ஓட்டங்களையும், அஞ்சலோ பெரேரா 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

தென்னாபிரிக்க அணி சார்பில் கசிசோ ரபடா 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் மற்றும் அன்ரிச் நோர்ட்ச் ஆகியோர் தல 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

226 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 28 ஓவர்கள் நிறைவில் 135 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், மின் ஒளி விளக்குகளில் ஏற்பட்ட கோளாறினால் இடைநிறுத்தப்பட்டது.

இதன்போது, தென்னாபிரிக்க அணி சார்பில் ஏய்டன் மார்க்ரம் ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களையும் ரஸ்ஸி வன் டெர் டஸ்ஸன் ஆட்டமிழக்காது 28 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் மாலிங்க மற்றும்
திசர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதனையடுத்து, குறித்த கோளாறை சீர்செய்ய முடியாத நிலையில் போட்டி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இதன்போது, டக்வெர்த் – லூயிஸ் முறைக்கு அமைய, தென்னாபிரிக்க அணி 95 ஓட்டங்களை பெற வேண்டியிருந்தது. தென்னாபிரிக்க அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக, தென்னாபிரிக்க அணியின் ஏய்டன் மார்க்ரம் தெரிவானதோடு, தொடரின் சிறப்பாட்டக்காரராக குயின்டன் டி கொக் தெரிவானார்.

அல்லாவின் மூன்று போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) கேப்டவுனில் இடம்பெறவுள்ளது.

0 Shares