உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் நிச்சயம் மரணம் என்ற ஒன்று உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. மரணம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணமும் தனித்துவமானது. உயிர் பிழைத்த ஒவ்வொருவரின் குணப்படுத்தும் செயல்முறையும் தனித்துவமானது.

மரணம் ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. உலகில் பிறந்த உயிர்களுக்கு மரணிக்கும் நாள் தெரிந்தால், வாழும் ஒவ்வொரு நாளுமே நரகமாகத் தான் இருக்கும்.

ஆனால் மரணம் ஒருவருக்கு நேரப் போகிறது என்றால், அந்த மரணம் நெருங்கும் போது ஒருசில அறிகுறிகளும் தெரியும். இந்த கட்டுரையில் அந்த அறிகுறிகள் தான் கொடுக்கப்பட்டுள்ளன.

அதிகமாக தூங்குவது


அதிகமாக தூங்குவது
வாழ்க்கை முடிவதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே, மரணத்தை நெருங்கும் நபர் வழக்கத்தை விட அதிகமாக தூங்க ஆரம்பிக்கலாம். ஒருவர் மரணத்தை நெருங்க நெருங்க அவர்களது உடலின் வளர்சிதை மாற்றம் குறைகிறது. மேலும் இயற்கையான ஆற்றல் வழங்கல் உடலுக்கு இல்லாமல், சோர்வு மற்றும் களைப்பை அதிகம் உணரக்கூடும்.

பசியின்மை

பசியின்மை
வயது அதிகரிக்க அதிகரிக்க உடலின் ஆற்றல் தேவையும் குறையும். ஏனெனில் அன்றாட பணிகளை செய்வதற்கு அவ்வளவு ஆற்றல் தேவைப்படாது. அதேப் போல் உணவு மற்றும் பானங்களின் தேவையும் குறையும். ஆனால் மரணத்தை நெருங்குபவர்கள், தங்களுக்கு பிடித்த உணவுகளையே அருகில் வைத்தாலும், அதை சாப்பிட வேண்டுமென்ற ஆசையே எழாமல் இருக்கும். அதிலும் மரணம் அருகில் வந்துவிட்டால், சில நாட்களுக்கு முன்பிருந்தே உணவு அல்லது நீர் பருகுவதைக் கூட முற்றிலும் நிறுத்தக்கூடும்.

மற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பது

மற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பது
மரணத்தை நெருங்குபவர்களின் உடலில் ஆற்றல் குறைவாக இருக்கும் என்பதால், அவர்கள் முன்பிருந்ததைப் போன்று அதிகமாக மற்றவர்களுடன் நேரத்தை செலவிடமாட்டார்கள். இப்படி ஒருவருக்கு திடீரென்று மற்றவர்களுடன் நேரத்தை செலவிட முடியாமல் போனால், அதே சமயம் உடலில் மிகுதியான அசௌகரியத்தை உணர்ந்தால், அவர்கள் மரணத்தை நெருங்குகிறார்கள் என்று அர்த்தமாம்.

முக்கியமான மாற்றங்கள்

முக்கியமான மாற்றங்கள்
ஒருவர் மரணத்தை நெருங்கினால், அவரது உடலில் சந்திக்கும் மாற்றங்களாவன:

* இரத்த அழுத்தத்தில் தாழ்வுநிலை

* மூச்சுவிடுவதில் மாற்றங்கள்

* சீரற்ற இதயத்துடிப்பு

* இதயம் துடிப்பதை அறிவதில் சிரமம்

* சிறுநீர் ப்ரௌன் அல்லது பழுப்பு நிறத்தில் வெளியேறுவது

ஒருவரது சிறுநீரின் நிறத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு காரணம், அவரது சிறுநீரகங்கள் செயலிழந்து போனதாக கூட இருக்கலாம். ஆனால் மருத்துவரை அணுகி இதுக்குறித்து பேசினால், ஏதாவது மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கழிவறை பழக்கங்களில் மாற்றங்கள்

கழிவறை பழக்கங்களில் மாற்றங்கள்
ஒருவர் மரணத்தை நெருங்கும் போது, சாப்பிடுவது மற்றும் குடிப்பதன் அளவு குறைவதால், குடலியக்கமும் குறையும். மேலும் இவர்கள் மிகவும் குறைவான அளவில் சிறுநீர் அல்லது மலத்தை வெளியேற்றலாம். எப்போது முழுமையாக சாப்பிடுவதையோ, குடிப்பதையோ முழுமையாக தவிர்க்கிறார்களோ, அவர்கள் கழிவறையைப் பயன்படுத்தும் அவசியம் இல்லாமல் போகும்.

பலவீனமான தசைகள்

பலவீனமான தசைகள்
ஒருவர் மரணத்தின் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தால், அவர்களது தசைகள் மிகவும் பலவீனமாகும். பலவீனமான தசைகள் என்றால், சிறு வேலையைக் கூட செய்ய முடியாத அளவில் பலவீனமாக இருப்பது. அதாவது ஒரு சிறிய கப்பை எடுப்பது அல்லது படுக்கையில் திரும்பிப் படுப்பது கூட முடியாமல் போகலாம். இம்மாதிரியான அறிகுறிகளும், மரணம் நெருங்கிவிட்டது என்பதற்கான அறிகுறிகளாகும்.

உடல் வெப்பநிலையில் இறக்கம்

உடல் வெப்பநிலையில் இறக்கம்
மரணத்தின் நாட்கள் நெருங்கிக் கொண்டிருப்பவர்களின் உடலில் இரத்தத்தின் அளவு அல்லது இரத்த ஓட்டம் குறைய ஆரம்பிக்கும். அதாவது உடலுறுப்புக்களான கைகள், பாதங்கள் போன்றவற்றில் இரத்த ஓட்டம் மிகவும் குறைவாக இருக்கும். இரத்த ஓட்டம் குறைவாக இருப்பதால் தான், இறந்தவர்கள் உடலைத் தொட்டல் மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது. மேலும் சருமத்தின் நிறம் நீலம் மற்றும் ஊதா நிறத்தில் மாறி காணப்படும்.

 மூச்சுவிடுவதில் மாற்றம்

மூச்சுவிடுவதில் மாற்றம்
மரணத்தை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திப்பார்கள். இவர்களது சுவாசிக்கும் வேகத்தில் திடீரென்று மாற்றம் ஏற்படும். அதுவும் சப்தத்துடன் சுவாசிக்கக்கூடும். இப்படியொரு நிலையை எப்போதாவது சந்தித்தால், இதுக்குறித்து மருத்துவரிடம் பேசி, பரிசோதித்து என்ன செய்யலாம் என்றும் கேட்டுக் கொள்ளுங்கள்.

குழப்பமான மனநிலை

குழப்பமான மனநிலை
மரணத்தை நெருங்கும் தருணம் கூட, மூளை மிகவும் சுறுசுறுப்புடன் இருக்கும். அதுவும் குழப்பமான மனநிலையுடன் இருக்கக்கூடும். ஆகவே உங்கள் அன்பிற்குரியவர் இப்படி திடீரென்று குழப்பமான மனநிலையில் பேசிக் கொண்டிருந்தால், அவர்களுடன் தொடர்ந்து பேச்சுக் கொடுங்கள். குழப்பமான மனநிலை வேறு ஏதேனும் பிரச்சனைக்கு கூட அறிகுறியாக இருக்கலாம். எனவே பேச்சு கொடுத்து, அவர்களிடம் உள்ள பிரச்சனையை அறிய முற்படுங்கள்.

13 Shares