ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பிரதி அமைச்சர் பி. ஏக்கநாயக்க, கடந்த வாரம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த நிலையில் இன்று கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (புதன்கிழமை) அநுராதபுரத்தில் பிரசார கூட்டம் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பி. ஏக்கநாயக்க தனது ஆதரவை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

மூத்த அர­சி­யல்­வா­தி­க­ளான டபிள்யூ.பி. ஏக்­க­நா­யக்க மற்றும் அத்தா­வுத சென­வி­ரத்ன ஆகியோர் கடந்த 2 ஆம் திகதி ஐக்கிய தேசிய முன்­னணி ஜனா­தி­பதி வேட்­பா­ள­ர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

16 Shares