அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது ரி-20 சர்வதேசப் போட்டி நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.

பிரிஸ்பேர்னில் இப்போட்டி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியை சந்தித்த நிலையில் இரண்டாவது போட்டி தீர்க்கமானதாக அமைகின்றது.

இதேவேளை இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணியில் மாற்றமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கமைய அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிச்சேல் ஸ்டார்க் இரண்டாவது போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12 Shares