வவுனியா மாமடு பகுதியில் கஞ்சா செடியினை வீட்டினில் பயிர் செய்து வந்த ஒருவரை நேற்று(15.03) கைது செய்துள்ளதாக வன்னி பிராந்திய பிரதிபொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேட போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்கள்..

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாமடு பகுதியில் உள்ள வீடொன்றில் தேடுதல் நடாத்திய பொலிசார் அங்கு மூன்று கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பதை அவதானித்தனர்.

குறித்த கஞ்சா பயிரினை கைப்பறிய பொலிசார் அதனை பயிரிட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யபட்டவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.