இலங்கை

கடந்த அரசின் அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய குழு~லக்ஷ்மன் யாப்பா !

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்டபட்ட சம்பவம் தொடர்பாக ஆராய விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்ட அரச அதிகாரிகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வது இதன் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்குள் இந்த ஆணைக்குழு மூலம் விசேட வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும் சட்ட ரீதியிலான அதிகாரத்தை வழங்குவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக அரசாங்க அதிகாரிகள் அரசாங்கத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானங்களை மேற்கொண்டால் தாம் தண்டனைக்கு உள்ளாகலாமென்ற அச்சத்துடன் செயல்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் அவ்வாறான நிலை ஏற்படுவதை இதற்கான புதிய சட்டம் தடுத்துவிடும். இதற்கான சட்ட எல்லைவரை சட்டமா அதிபரினால் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

வாகன எரிபொருள் தொடர்பில் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

venuja

யாழில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய மாணவி~ அம்மம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

மயூனு

வெலிக்கடை சிறைக்கு சென்ற மர்ம வாகனம் இவருடையதா!

மயூனு

Leave a Comment