கடந்த அரசாங்கத்தின் கடன்களையும் செலுத்தி, அரசாங்கம் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்கின்றது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்திப் பணிகளை கிராமங்களுக்கும் எடுத்துச் சென்றதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிகளை பூர்த்திசெய்த டிப்ளோமா தாரிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் நேற்று பிரதமர் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.