இலங்கை பிரதான செய்திகள்

கடற்படை வாகனம் மோதி கணவன் பலி! மனைவி படுகாயம்!! – வட்டுவாகலில் சோகம்

முல்லைத்தீவு, வட்டுவாகலில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் முல்லைத்தீவிலிருந்து சென்ற கடற்படையினரின் வாகனம் சப்த கன்னிகள் ஆலயத்துக்கு முன்பாக, முல்லைத்தீவு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மோதியது.

இன்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் மல்லாவி துணுக்காயைச் சேர்ந்த கே.ஜீவன் (வயது – 32) உயிரிழந்தார். அவரது மனைவியான ஜீ.வினுசா (வயது – 28) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இவர்கள் திருமணமாகி மூன்று மாதங்களே ஆகின்றன என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

விபத்தை ஏற்படுத்திய கடற்படையினரின் வாகனத்திலேயே காயமடைந்த வினுசா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர் வாகனத்துடன் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்குச் சென்று சாரதி சரணடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஜனாதிபதி கோத்தாபய, பிரதமர் சஜித் தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறும்

venuja

திடீரென பாயும் வெள்ளமும் ~ மட்டு வீதியின் அவல நிலையும்!{படங்கள்}

மயூனு

ஜனாதிபதி மாளிகை வேண்டாம் ~அடம்பிடிக்கும் கோட்டா !

மயூனு

Leave a Comment