தலைமன்னார் கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சாப் பொதிகளை  கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை மாலை மீட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்பரப்பில்  மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற் கிடமான 2 பொதிளை கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் அவதானித்துள்ளனர்.
-குறித்த இரண்டு பொதிகளையும் மீட்ட கடற்படையினர் அதனை சோதனைக்கு உற்படுத்திய போது கேரள கஞ்சா காணப்பட்டமை தெரிய வந்தது.

மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 86 கிலோ 520   கிராம் என கடற்படை தெரிவித்துள்ளது.
-தலைமன்னார் கடலில் கடற்படையினரின் ரோந்து 

நடவடிக்கைகளின் காரணமாக சந்தேக நபர்கள் கேரள கஞ்சா பொதிகளை கடலில் போட்டு விட்டு தப்பித்திருக்க முடியும் என கடற்படை தெரிவித்துள்ளது.
 மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மேலதிக விசாரணைக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

6 Shares