பிரான்சில் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்திய மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் Indre-et-Loire நகரில் நேற்று 29 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள Richelieu மேல்நிலைப்பள்ளியில் வகுப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி புத்தகம் ஒன்றுக்குள் கூரான கத்தி ஒன்றை மறைத்து வைத்துக்கொண்டு ஆசிரியருக்கு அருகே சென்றதாகவும், பின்னர் கத்தியை உருவி ஆசியரை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆசிரியரின் கழுத்துப்பகுதியில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் வெட்டியதாகவும், ஆனால் அதிஷ்ட்டவசமாக ஆழமான வெட்டுக்காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பின்னர் Tours நகர காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாடசாலையில் இருந்த மாணவர்களுக்கு உளநல சிகிச்சைகள்  அளிக்கப்பட்டது.