உலக செய்திகள்

கனேடியத் தமிழருக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வழங்கிய உயர் கௌரவம்.!! குவியும் வாழ்த்துக்கள்!!

கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஸ்கார்பாரோ- ரூஜ் பூங்காவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரியை கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறித்த பதவிக்கு நியமனம் செய்துள்ளார். கடந்த 42 ஆவது கனேடிய நாடாளுமன்றத்தில், ஹரி ஆனந்தசங்கரி 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை சுதேச மற்றும் வடக்கு விவகாரக் குழுவின் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.இதன் போது 262 ஆவது சட்டமான கனேடிய பழங்குடி மக்களின் உரிமைகள் குறித்து கனடாவின் சட்டங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்திற்கு அமைவாக இருப்பதை உறுதி செய்வதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற அவர் நாடாளுமன்றில் முன்னின்று செயற்பட்டார்.கனேடிய பாரம்பரிய மற்றும் பன்முககலாச்சார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக, சுதேச மொழிகளை மதிக்கும் சட்டமான பில் சி -91 ஐ நிறைவேற்றுவதற்காகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஹரி ஆனந்தசங்கரி தெரிவிக்கும் போது;

சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றுமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேட்டுக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நம் வரலாற்றின் போது, பழங்குடி மக்களுக்கு எதிராக கனடா செய்த தவறுகளை சுயநிர்ணயத்தின் அடிப்படையில் கொள்கைகளை அங்கீகரித்து செயல்படுத்துவதன் மூலம் மட்டுமே, அதனை சரிசெய்ய முடியும்.இந்த நிலத்தில் முதல் தலைமுறையாக குடியேறியவர்கள் என்ற வரலாற்றுப் பெருமையை பெற்றுள்ள பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை, முழுமையாக அமுல்படுத்துவது உட்பட பழங்குடி மக்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்கு அயராது உழைக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.இந்தப் புதிய பதவியில், அமைச்சர் கரோலின் பென்னட் மற்றும் பழங்குடி மக்களுடன் இணைந்து கனடா முழுவதும் பணிபுரிவதற்கு எதிர்பார்க்கின்றேன், என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பாடசாலையில் வைத்து தன்னைத்தானே தீயிட்டுக்கொண்ட மாணவி..!

மயூனு

5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து – 5 பேர் பலி

venuja

திடீரென அலறிய மகள்..! ஓடோடிச் சென்ற தந்தை..! அங்கு அவர் கண்ட காட்சி! பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

venuja

Leave a Comment