உலக செய்திகள்

காட்டுத் தீயை எதிர்த்துப் போராடும் கர்ப்பிணி~குவியும் வாழ்த்துக்கள் !

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் எரியும் காட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார் 13 வாரம் கர்ப்பமாக உள்ள தீயணைப்பாளர். 

23 வயது கேட் ராபின்சன்-வில்லியம்ஸ் (Kat Robinson Williams) தீயணைப்பாளர் ஆடையுடன் Instagramஇல் தம் படத்தைப் பதிவுசெய்திருந்தார். தம் நாட்டை நேசிப்பதாகவும், தீயை அணைக்க தமது நண்பர்கள் போராடி வரும்போது தாம் மட்டும் எதுவும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார். 

13 வாரச் சிசுவின் sonogram படத்தையும் அவர் பதிவேற்றம் செய்தார். சரியான பாதுகாப்பு ஆடைகளை அணிந்து, மருத்துவரின் ஒப்புதலுடன் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டதாக BBC செய்தி நிறுவனத்திடம் கூறினார் அவர். 1995இல், தம் தாயாரும் கர்ப்பமாக இருந்தபோது தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்டதாகக் கூறினார். சுமார் 2.5 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பை அழித்துள்ள காட்டுத் தீ, அதிக வறட்சியின் காரணமாக மூண்டுள்ளது.

Related posts

17 வயதில் திருமணம் செய்ய ஆசைப்பட்ட பள்ளி மாணவன்~பெற்றோர் செய்த செயல் !

மயூனு

ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் – டிரம்ப் அதிரடி எச்சரிக்கை

venuja

அதிரடி காட்டும் ட்ரம்ப் – புதிதாக விண்வெளிப் படை உருவாக்கம்!

venuja

Leave a Comment