இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி மது அருந்திவிட்டு தன்னுடைய முன்னாள் காதலியின் வீட்டிற்கு சென்று பொருட்களை அடித்து, உடைத்து, கோபம் தீராத காரணத்தால் அவருடைய வீட்டிற்கு தீ வைத்து இருக்கின்றார். தீ விபத்திலிருந்து தப்பிக்க முயன்ற போது, அவரும் மாட்டிக்கொண்டு கை கால்களில் தீயால் பாதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து வீடு முழுவதும் பரவுவதற்குள் தீயை அணைத்தனர். இது குறித்த நீதிமன்ற விசாரணையில் தன்னுடைய ஒரே காதலியும் பிரேக்கப் என்று கூறியதால் ஆத்திரமடைந்த அவர் இது போல நடந்துகொண்டார்.

அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நீதிபதி இது மிகவும் அபாயகரமான செயல் அவரை மன்னிக்க முடியாது. அருகில் வயதான குடும்பத்தினர் இருந்தனர். அவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் என்ன ஆகியிருக்கும் என்று கேட்டார்.

அதற்கு அவர் இயல்பில் இதுபோன்ற குணம் உடையவர் இல்லை. காதலி மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகத் தான் இது போன்று நடந்து கொண்டார். எனவே அவருக்கு கடுமையான தண்டனை எதுவும் வழங்காமல், குறைந்த தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதன் பின்னர் நான்காண்டுகள் சிறைதண்டனை இரண்டு ஆண்டுகளை நீக்கம் செய்துவிட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கினர்.