தென்னாபிரிக்கக் கிரிக்கெட் அணியின் முன்னணித் துடுப்பாட்ட வீரரான  ஹசிம் ஆம்லா சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.

36 வயதான ஆம்லா, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளார். எனினும், அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிணணக் கிரிக்கெட் தொடரில் இவரது ஆட்டம் சிறப்பானதாக அமையவில்லை. 7 போட்டிகளில் விளையாடியபோதும் 203 ஓட்டங்களை மாத்திரமே அவரால் சேர்க்க முடிந்தது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் தனது முடிவை நேற்று அறிவித்துள்ளார்.

“எனது நீண்ட கால கிரிக்கெட்டில் பல பாடங்களைக் கற்றுக்கொண்டேன். தற்போது ஓய்வு பெறுகிறேன் “என்றார்.

2004ஆம்ஆண்டு கொல்கத்தாவில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆம்லா, 15 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இவர் 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 28 சதங்களுடன் 9282 ஓட்டங்களையும், 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 27 சதங்களுடன் 8113 ஓட்டங்களையும், 44  இருபது-20 போட்டிகளில் விளையாடி 1277 ஓட்டங்களையும் சேர்த்துள்ளார்.

19 Shares