இலங்கை

கிழக்கின் புரட்சி வீரர்களுக்கு முகத்தில் கரி பூசிய கோட்டா !

இலங்கையின் புதிய ஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டு, இடைக்கால அமைச்சரவை ஒன்றை உருவாக்கியுள்ளார். அதன் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவியேற்பு இன்று காலை நடைபெற்றது. கோத்தாபயவின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களில் கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த எவருக்கும் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கோட்டாபயவின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்த வியாழேந்திரனுக்கு எந்தப்பதவியும் வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக ஒட்டுமொத்த நாட்டின் ஜனாதிபதியால் சிறுபான்மையின மக்கள் பெரிதும் வாழுகின்ற கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று புதிய அமைச்சரவையில் சிறுபான்மையினர் வாழ்கின்ற வடக்கில் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மலையகத்தில் ஆறுமுகம் தொண்டமானுக்கும் அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாவுக்கு எதிராகவே இருந்தனர். ஆயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் கருணா, பிள்ளையான் போன்றவர்கள் கோட்டாவின் வெற்றிக்காக கடும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் கோட்டாவுக்கு 38 ஆயிரத்து 460 வாக்குகளும் அம்பாறையில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 58 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதற்குக் காரணமானவர்கள் வியாழேந்திரன், கருணா, பிள்ளையான் போன்றவர்களே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்எஸ்.வியாழேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டும், தான்சார்ந்த கட்சியை உதறித்தள்ளிவிட்டு கோட்டாபயவுக்கு பகிரங்கமாகவே ஆதரவு வழங்கியிருந்தார். அவருக்கு அமைச்சரவையில் எந்தப் பதவிகளும் வழங்காதமையால் புதிய ஜனாதிபதியால் கிழக்கு மாகாணம் புறக்கிக்கப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related posts

சாந்தி எம்பி கட்டிய பாடசாலை மதில் உடைந்து விழுந்துள்ளது!

மயூனு

கோட்டாவின் மற்றுமொரு அதிரடி~ கலக்கத்தில் அரச களவாணிகள் !

மயூனு

கொலைகளுடன் தொடர்புடைய EPDP கமல்~ டக்ளஸ் உடன் கேக் வெட்டி கும்மாளம் !

மயூனு

Leave a Comment