உலக செய்திகள் பிரதான செய்திகள்

குடியரசு தின விழாவையொட்டி டில்லியில் 7 நாட்கள் 2 மணி நேரம் விமானங்கள் பறக்கத் தடை!

இந்தியாவின் குடியரசு தின விழாவையொட்டி டில்லி விமான நிலையத்தில் 7 நாட்கள் (ஜனவரி 18, 20, 21, 22, 23, 24, 26) சுமார் 2 மணி நேரம், விமானங்கள் இயக்கப்பட மாட்டாது என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

குடியரசு தின விழாவுக்காக நடைபெறும் ஒத்திகைக்காகவும், விழா நாளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் எதிர்வரும் 18ஆம் திகதி மற்றும் 20 முதல் 24ஆம் திகதி வரையிலும் மற்றும் குடியரசு தின விழா நடைபெறும் நாளான 26ஆம் திகதியும் டில்லி விமான நிலையத்தில் இருந்து, விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை ஆகியவை காலை 10.35 மணி முதல் பகல் 12.15 மணி வரை தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நாட்களில் டில்லி வழியாக வான்வெளி மூடப்பட உள்ளதால், அனைத்து விமான நிறுவனங்களின் விமான நடவடிக்கைகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Related posts

ஐ.நா. தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தே – ஏற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி திட்டவட்டம்

venuja

கடும்போட்டிகளுக்கு மத்தியில் நாளை நடைபெறவுள்ள பாரிய மாற்றம் – பரபரப்பாகும் இலங்கை

admin

பொதுத் தேர்தலில் மஹிந்த அரசாங்கம் தோல்வி அடையுமா? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

venuja

Leave a Comment