தமிழகம்

குடும்பத்தில் குழப்பம் – பெற்ற பிள்ளைகளை மலை மீது எறிந்து கொடூரமாக கொலை செய்த தந்தை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதி அரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிரஞ்சீவி. இவருக்கும், பாக்கியம் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு 3ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீராஜ் என்ற மகனும், 1ம் வகுப்பு படிக்கும் கவியரசி என்ற மகளும் இருந்தனர். கடந்த 2 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த பாக்கியம், மீண்டும் கணவரின் வீட்டிற்கு வர மறுத்துள்ளார்.

இந்நிலையில் பாக்கியத்தின் உடல்நலக்குறைவுக்கு காரணம் கணவர் சீரஞ்சீவியே என மாமியார் திட்டியதால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சிரஞ்சீவி தன் இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு அரசம்பட்டியில், தனியாக வசித்து வந்துள்ளார்.

பல நாட்கள் ஆகியும் மனைவி பாக்கியம் வராததால் மனமுடைந்த சிரஞ்சீவி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரண்டு குழந்தைகளையும் இருச்சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சீக்குப்பாறையில் உள்ள வியூ பாயிண்ட் 150 அடி பள்ளத்தாக்கில் வீசி கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த போலீசார், சிரஞ்சீவையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக, இருகுழந்தைகளை தந்தையே கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

6 வருடங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்பட்ட மகள்~ சவுதியில் கொத்தடிமையாக அதிர்ச்சி தகவல் !

மயூனு

15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு பெற்றோர் செய்த செயல் – ஐவர் அதிரடி கைது

venuja

மனைவியை பார்க்க காதலுடன் வந்த கணவன் படுக்கை அறையில் கண்ட அதிர்ச்சி காட்சி !

மயூனு

Leave a Comment