ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்விளம்பர பதாதைகள் அக்கட்சியின் தீவிர ஆதரவாளர் அஹமட் புர்ஹானினால் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் கல்முனை பகுதிகளில் பரவலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தாமரை மொட்டு இலச்சினையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரது ஒளிப்படங்களுடன் இவ்விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், இவ்வாறு விளம்பர பதாதைகள்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 Shares