உலக செய்திகள்

கோர விபத்தில் தீப்பற்றிய வாகனம் – 28 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் மினி வேன் மீது லாரி மோதியதால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 28 பேர் உயிரிழந்தனர்.


நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பவ்ஜ் நகரில் உள்ள நெடுச்சாலையில் ஒரு மின் வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் 24 பேர் பயணம் செய்தனர்.
குபி ஹரி என்ற பகுதியை வேன் கடந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபுறம் சந்தைக்கு மாடுகளை ஏற்றிச்சென்ற லாரி மீது வேகமாக மோதியது. 
இந்த விபத்து காரணமாக இரு வாகனங்களிலும் தீ பற்றி எரிந்தது. இதனால், வேனில் 24 பேர், லாரியில் 4 பேர் என மொத்தம் 28 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைஜீரியாவில் மோசமான சாலைகள், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்லுதல் மற்றும் அதிவேகமாக வாகனத்தை இயக்குதல் போன்ற காரணங்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சகோதரர்களின் கண் முன்னே நடந்த 2வயது தங்கையின் மரணம் ~ குலை நடுங்க வைக்கும் சம்பவம்!{படம்}

admin

70 வயது தாத்தாவுக்கும் 20 வயது அழகிக்கும் நடந்த திருமணம்~பணம் பாதாளம் வரை பாயும் !

மயூனு

சற்றுமுன் பிரித்தானிய தலைநகரில் கத்தி குத்து – பதற்றத்தில் மக்கள் (படங்கள்)

venuja

Leave a Comment