எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும், தற்போதைய சபாநாயகருமான கரு ஜயசூரியவை நியமிப்பதற்குப் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விருப்பம் வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஏற்கனவே கட்சிசியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டிருந்ததாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் டுவிட்டரில் கடந்த வாரம் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்றைய பேச்சுவார்த்தைக்கும், கடந்த வாரம் இடம்பெற்றிருந்த சமரசப் பேச்சுவார்த்தைக்கும் சஜித் பிரேமதாஸ கலந்துகொள்ளாதமை ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே அவர் இந்த யோசனையை முன்வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு எதிர்கட்சித் தலைவரான கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டால், அவர் சபாநாயகர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்பதுவும் அங்கு குறிப்பிடத்தக்கது.